Fix Appointment

வாஸ்து

ஆண்டாள் வாஸ்து

ஆண்டாள் வாஸ்து

வாழ்க்கை வளமாகட்டும்

வாஸ்து குறித்து

பஞ்சபூதங்கள், சூரியனின் துணையுடன், ஆட்சி செய்து கொண்டு இருக்கும் இப்புவியில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் சில, பல விசயங்களால், விதிகளால் கட்டுப்பட்டு இருக்கின்றன அவர்களையும் அறியாமல். ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் போது தான் அனைத்துமே உயிர்ப்பு பெறுகின்றது. இயற்கைக்கே இந்த உயிர்ப்பும், ஒழுங்கும் தேவைப்படும் போது நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? இயற்கையுடன் ஒத்து வாழும் வாழ்வே இன்பமயமான வாழ்வு.

ஐந்தறிவு படைத்த பறவைகள் கூட தன் கூட்டை கட்டும் முன் மெனக்கெடுகின்றன. ஆறறிவு படைத்த நாம் ஏன், எதற்கு, எப்படி என யோசித்து வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை பூங்காவனமாகும். நம் முன்னோர் கூறிச்சென்ற ஒவ்வொரு விசயத்திலும் ஆயிரமாயிரம் அர்த்தம் பொதிந்துள்ளதை புரிந்து கொண்டு செம்மையாக வாழ்வோம் .....ஆனந்தமாக!!!!.

வாஸ்துவின் அடிப்படை சூத்திரங்கள்:

1. வீடு / மனை, சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.

2. வடக்கிலும், கிழக்கிலும் காலி இடம் அதிகம் இருக்க வேண்டும்.

3. உச்சவாசல் அமைப்பில் வாசல் இருக்க வேண்டும்.

4. தெருக்குத்து, உச்சவாசல் பகுதியில் இருப்பது நல்லது.

5. மாடிப்படி சரியான இடத்தில், கேன்டிலிவர் அமைப்பில் அமைக்க வேண்டும்.

6. வடக்கிலும், கிழக்கிலும் ஜன்னல் அவசியம் இருக்க வேண்டும்.

வாஸ்துவில் பரிகாரம் உண்டா?

பரிகாரம் என்பதே நம்பிக்கையை விதைக்கத்தானே. எண்ணம் சிறந்தால் சொல்லும், சொல் சரியானால் செயலும் மேம்படும்.

இயற்கையோடு இணைந்து, மனிதர்களை மதித்து, எல்லா ஜீவராசிகளின் மீதும் அன்பு செலுத்தி, இல்லாதவர்களுக்கு கொடுத்து, நமக்கு மேல் ஓர் சக்தி உள்ளது என்பதை புரிந்து கொண்டு வாழ்ந்தால், வாழ்க்கை வசப்படும். பரிகாரம் தேவைப்படாது.

சொந்த வீடு யாருக்கு அமையும்?

உண்பதற்கு உணவும், உடுக்க உடையும், இருக்க ஒரு வாடைகை வீடும் உள்ளது. இதுவே போதும் என்று நினைப்பவர்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கும்.

" வாழ்க்கை வாழ்வதற்கல்ல....கொண்டாடுவதற்கு" என்ற எண்ணம் கொண்டு, தேனீக்கள் போல் சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கே சொந்த வீடு அமையும்.

வயிற்றில் எப்போதும் ஒரு நெருப்பு கனன்று கொண்டே இருக்க வேண்டும். அடுத்தகட்ட பிரயாணத்தை பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருப்பவர்கள் உழைக்க தயங்காதவர்கள். இவர்களுக்கு சொந்த வீடு சீக்கிரம் அமையும்.

வாஸ்து ரீதியாக சொல்ல வேண்டும் எனில், தற்போது வாழும் வீட்டில் வடக்கு, கிழக்கை சரியாக கையாளத்தெரிந்தவர்களுக்கு சொந்தவீடு உடனடியாய் அமையும்.

வாழ்க வளமுடன்!!!!! வளர்க பணமுடன்!!!!